search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal employees"

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சென்னை பெருநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பிடித்து எரிவதையோ, சிறு தீப்பொறி மூலம் விபத்து ஏற்படுவதையோ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வரை குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் பாலமுரளி தெரிவித்தார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இந்த இரண்டு கிடங்குகளிலும் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    பெருங்குடியில் 225.16 ஏக்கர் குப்பை கிடங்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் 2021-ம் ஆண்டு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே கட்டுப்படுத்தப்பட்டது. தனியாரிடம் இருந்து 3 டேங்கர்கள் வாடகைக்கு எடுத்து குப்பை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் 2 கிடங்கிலும் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குப்பை குவியல்களுக்கு இடையே 3 மீட்டர் அகலமுள்ள வழித்தடங்களும் தீ பரவாமல் தடுக்க அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அல்லது அதற்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

    இது தவிர தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பீடி, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குப்பை கிடங்கில் புகை ஏற்பட்டால் உடனடியாக அதனை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலம் முடியும் வரை குப்பை கிடங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

    • உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம்
    • அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை அளிக்கப்பட்டது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங் காங்கே சுற்றித்திரிவதாக வாணியம்பாடி நகராட்சி அதிகா ரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று வாணியம்பாடிசி.என்.ஏ. சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மூன்று மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

    மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்து மாடுக ளையும் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தெருவிளக்கு பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி மூலமாகப் பணியாளா்களை நியமிக்கக்கூடாது.
    • அவுட்சோா்சிங் மூலமாக செய்ய வேண்டும் என்று அரசாணை 139 இல் உத்தரவிட்டுள்ளது.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஊத்துக்குளி ஆா்.எஸ்.பேருந்து நிலையம் முன்பு சிஐடியூ உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊத்துக்குளி பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா்.

    இதில் பங்கேற்ற ஊழியா்கள் கூறியதாவது:- தமிழக அரசு பேரூராட்சிப் பணிகளான பொது சுகாதாரம், குடிநீா் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி மூலமாகப் பணியாளா்களை நியமிக்கக்கூடாது. அவுட்சோா்சிங் மூலமாக செய்ய வேண்டும் என்று அரசாணை 139 இல் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்த அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • புதுவை நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு பேராட்டக்குழுவினர் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆம்பூர் சாலை அருகே நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாய கவேல் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு பேராட்டக்குழுவினர் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் சாலை அருகே நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாய கவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தகணபதி, வேளாங்கண்ணிதாசன், அய்யப்பன், சகாயராஜ், உதயகுமார், மண்ணாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியத்தை நேரடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் விடுப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ×