search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Special Meeting"

    • தேவகோட்டை நகராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.
    • தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யின் சிறப்பு கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர்:-குப்பைகளை அள்ளுவதில் பணியாளர்கள் தொய்வில்லாமல் அனைவரும் பணிக்கு வர வேண்டும்.

    தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன்:- பணியாளர்கள் வரி வசூல் செய்ய காலையில் செல்வதால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படு கிறது. இதனால் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வரி வசூல் செய்தால் நல்லது.

    தலைவர் சுந்தரலிங்கம்:- கொரோனா காலத்தில் வரி வசூல் பாக்கி காரணமாக பணியாளர்களின் பணி அதி கரித்து உள்ளது. அதற்கு முன்புள்ள காலங்களில் வரி வசூல் நகராட்சி 100 சதவீதம் செய்து சாதனை புரிந்துள்ளது. சில மாதங்களில் அவை சரி செய்யப்படும்.

    துணைத் தலைவர்:- 2019-ம் ஆண்டுக்கான வரி தற்போது வரி உயர்வு உள்ளபடி வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கவுன்சிலர் பிச்சை யம்மாள்:- எனது வார்டு களில் உள்ள பொது கழிப்பிட கட்டிடத்தில் போர்வெல் சரி செய்ய வேண்டும்.

    கவுன்சிலர் சுதா:- தூய்மைப் பணியாளர்கள் அவர்கள் பணிக்கு வரும் போது உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    தலைவர் சுந்தரலிங்கம்:- தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்படும்.

    கவுன்சிலர் அய்யப்பன்:- தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைவர் சுந்தரலிங்கம்:- அரசு சார்பில் சில தினங்களில் ஆணையாளர் அல்லது பொறுப்பாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வரும்.

    கவுன்சிலர் அனிதா:- தற்போது 115 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எதன் அடிப்படையில் வார்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள்?

    சுகாதார ஆய்வாளர்:- தள்ளுவண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 250 வீடுகளிலும், பேட்டரி வண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 400 வீடுகளிலும், மினி வேனில் செல்லும் பணியாளர்கள் சுமார் 800 வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் உள்ளனர்.

    தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன்:- நகராட்சியில் அனைத்து வார்டுகளில் உள்ள பொது சுகாதார கழிப்பறை கட்டிடங்களை முழுமையாக பராமரிப்பு செய்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

    தலைவர் சுந்தரலிங்கம்:- இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×