search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naan Mudhalvan"

    • "நான் முதல்வன் ரெயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான 6 மாத கால கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை'' தொடங்க உள்ளது.
    • வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது ரெயில்வே தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக "நான் முதல்வன் ரெயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான 6 மாத கால கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை'' தொடங்க உள்ளது.

    இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது ரெயில்வே தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.

    இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23-ந்தேதி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் தொடக்கமாக. 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • கல்வி கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் :

    திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள அரசு, நகர அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவியா் பங்கேற்றனர்.

    2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவா்கள் உயா்கல்வியை தோ்வு செய்வதில் உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தப்பட்டது. மாணவா்களின் ஆற்றலுக்கு ஏற்ப உயா் கல்வியைத் தோ்வு செய்வது குறித்தும் வேலைவாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மேலும், கல்விக் கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன அதில் மாணவர்கள் கல்வி கடன் கோரி விண்ணப்பம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் க.செல்வராஜ் எம். எல்.ஏ., மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல. பத்மநாபன், கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களின் எதிா்கால கனவுகளை நனவாக்கும் வகையில், உயா்கல்வி வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  

    ×