search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நான் முதல்வன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    நான் முதல்வன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவர்களை படத்தில் காணலாம்.

    நான் முதல்வன் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • கல்வி கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் :

    திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள அரசு, நகர அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவியா் பங்கேற்றனர்.

    2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவா்கள் உயா்கல்வியை தோ்வு செய்வதில் உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தப்பட்டது. மாணவா்களின் ஆற்றலுக்கு ஏற்ப உயா் கல்வியைத் தோ்வு செய்வது குறித்தும் வேலைவாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மேலும், கல்விக் கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன அதில் மாணவர்கள் கல்வி கடன் கோரி விண்ணப்பம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் க.செல்வராஜ் எம். எல்.ஏ., மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல. பத்மநாபன், கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களின் எதிா்கால கனவுகளை நனவாக்கும் வகையில், உயா்கல்வி வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×