என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nassau County Stadium"
- டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
- நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று அரங்கேறுகிறது.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.
34 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்திற்கு இந்திய ரசிகர்களின் வருகையே அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் உற்சாகம் நமது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.
இந்திய அணி
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. அயர்லாந்தை 96 ரன்னில் மடக்கிய இந்தியா 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது.
கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதமும், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (3 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (2 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (2 விக்கெட்) ஆகியோரது விக்கெட் ஜாலமும் வெற்றியை சுலபமாக்கின.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான சவால் வேறு மாதிரியானது. அந்த அணியில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
நியூயார்க் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால், இவர்களை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை மனதில் வைத்து விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே ஆகியோரும் பேட்டிங்கில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், சிராஜ், பாண்ட்யா கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது.
பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் மண்ணை கவ்வியது. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம். ஏனெனில் இந்தியாவிடமும் தோற்றால் ஏறக்குறைய அவர்களின் சூப்பர்8 கனவு கலைந்து விடும்.
எனவே களத்தில் முழுமூச்சுடன் போராடுவார்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.
இந்த தொடரை பொறுத்தவரை ஆடுகளம் தான் இப்போது ஹீரோ. வழக்கத்துக்கு மாறாக பந்து வீச்சுக்கு நிறையவே ஒத்துழைக்கிறது. இந்த ஆடுகளத்தில் நிறைய வெடிப்புகள் காணப்படுவதால் சீரற்ற பவுன்ஸ்களை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.
ஆடுகளம் சரியில்லை என்று ஐ.சி.சி. வரை புகார் சென்று விட்டது. 150-160 ரன் எடுத்தாலே அது பெரும்பாலும் வெற்றிக்குரிய ஸ்கோராக பார்க்கப்படுகிறது. அதனால் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு, சூழலுக்கு ஏற்ப தங்களை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டு எந்த அணி ஆடுகிறதோ அந்த அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் போட்டிக்கு மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், பஹர் ஜமான், ஷதப் கான், அசம் கான் அல்லது சைம் அயுப், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, முகமது அமிர் அல்லது அப்பாஸ் அப்ரிடி.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
- விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்