என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nerinchipet"
- நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.
அம்மாபேட்டை:
மேட்டூர் அணைக்கு கடந்த 50 நாட்களுக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்க ப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது ஆற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் இன்று முதல் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 50 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.
- அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
- நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
அம்மாபேட்டை:
கடந்த 20 நாட்களுக்கு மேல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் ஜூலை 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.இதனால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
தண்ணீர் குறைந்த அளவிலேயே வருவதால் நேற்று பிற்பகல் முதல் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
கடந்த 25 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழி யாக 8 கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.