search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Delhi air pollution"

    • தொடர்ந்து நச்சு புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு.
    • காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.

    டெல்லி ஆனந்த் விகார், அசோக்விகார், பவானா, ஜஹாங்கிர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு மிக மோசமாக இருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

    காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. தற்போது பனி பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரியவிட்டு செல்கின்றனர்.


    காற்று மாசுவினால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. புகைமூட்டம் கார ணமாக டெல்லிக்கு 22 ரெயில்கள் தாமதமாக சென்றன. 9 ரெயில்களில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக் கப்பட்டுள்ளது. 8 விமா னங்கள் தரையிறக்க முடியா மல் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் தவிப் புக்கு உள்ளானார்கள்.

    தொடர் காற்று மாசுபாட் டால் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவிட்டது.

    நேற்று முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி தெரி வித்துள்ளார். இந்த வகுப்பு கள் ஆன்லைன் மூலம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி பல்கலைக்கழ கத்தில் வருகிற 23-ந்தேதி வரையிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 22-ந்தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

    காற்று மாசு பிரச்சினை இதுவரை இல்லாத வகை யில் உருவெடுத்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுவாச பிரச்சினை உள் ளிட்ட நோய்களால் அவதிப் பட்டு வருகின்றனர்.

    இதனால் தினமும் ஆஸ்பத்திரியை நோக்கி படை யெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து ஒரு மணி நேரம் நச்சு புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை சுவாசிப்பவர்க ளுக்கு உடனடியாக எதிர்ம றையான பாதிப்புகள் உட லில் ஏற்படுவதாகவும், இந்த துகள்கள் சுவாச மண்டலத் தில் நுழையும் போது நுரை யீரலில் வீக்கத்தை ஏற்படுத் துவதாகவும் டாக்டர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பொது மக்கள் முகக் கவசம் ( மாஸ்க்) அணிய தொடங்கி உள்ளனர்.

    • டெல்லி துணை நிலை ஆளுனர் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினார்
    • காற்று மாசு ஒரு தேசிய அவசர நிலை என்கிறார் டாக்டர். அர்விந்த் குமார்

    புது டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மாசு ஏற்பட்டதன் விளைவாக காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது.

    காற்றின் தர குறியீடு 500 எனும் அளவை தாண்டியதால், இது அபாயகரமானதாக கருதப்படுகிறது.

    இதனால் பல உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என்பதால் டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே. சக்சேனா, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறித்தி உள்ளார்.

    இந்நிலையில், அதிகரிக்கும் காற்று மாசு குறித்து டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் துறை சிறப்பு மருத்துவர் டாக்டர். அர்விந்த் குமார் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து கூறியதாவது:

    ஏர் ப்யூரிஃபையர் (air purifier) எனப்படும் காற்றை சுத்திகரிக்கும் சாதனங்கள் தற்போதைய சூழலுக்கு ஒரு தீர்வு அல்ல. காற்று மாசு ஒரு பொது சுகாதார பிரச்சனை. வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரத்திற்கான குறியீடு 500 எனும் அளவில் இருந்தால், சுத்திகரிக்கும் சாதனங்கள் அதை 15 அல்லது 20க்கு கொண்டு வராது. காற்றின் தரம் குறைந்துள்ள நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் வருவதாக சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல குழந்தைகள் அகாலமாக உயிரிழக்கவும் இது காரணமாகிறது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு வட இந்தியாவில் மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இது ஒரு தேசிய அவசர நிலை. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் தரங்குறைந்த காற்று பாதிக்கும். எளிதாக இது ஆஸ்துமா நோய் வர வழிவகுக்கும். டெல்லியில் 1100 குழந்தைகளை ஆய்வு செய்ததில் 3 பேரில் 1 குழந்தை எனும் விகிதத்தில் ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது. தாயின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் இது பாதிக்கிறது. சுமார் 25 சிகரெட் புகைத்தால் வரும் நுரையீரல் நோய்கள், காற்று மாசு காரணமாக புகை பிடிக்காதவர்களுக்கும் வர கூடும்.

    இவ்வாறு டாக்டர். அர்விந்த் கூறினார்.

    ×