search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    25 சிகரெட் ஏற்படுத்தும் பாதிப்பிற்கு சமம்: எச்சரிக்கும் மருத்துவர்
    X

    25 சிகரெட் ஏற்படுத்தும் பாதிப்பிற்கு சமம்: எச்சரிக்கும் மருத்துவர்

    • டெல்லி துணை நிலை ஆளுனர் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினார்
    • காற்று மாசு ஒரு தேசிய அவசர நிலை என்கிறார் டாக்டர். அர்விந்த் குமார்

    புது டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மாசு ஏற்பட்டதன் விளைவாக காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது.

    காற்றின் தர குறியீடு 500 எனும் அளவை தாண்டியதால், இது அபாயகரமானதாக கருதப்படுகிறது.

    இதனால் பல உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என்பதால் டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே. சக்சேனா, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறித்தி உள்ளார்.

    இந்நிலையில், அதிகரிக்கும் காற்று மாசு குறித்து டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் துறை சிறப்பு மருத்துவர் டாக்டர். அர்விந்த் குமார் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து கூறியதாவது:

    ஏர் ப்யூரிஃபையர் (air purifier) எனப்படும் காற்றை சுத்திகரிக்கும் சாதனங்கள் தற்போதைய சூழலுக்கு ஒரு தீர்வு அல்ல. காற்று மாசு ஒரு பொது சுகாதார பிரச்சனை. வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரத்திற்கான குறியீடு 500 எனும் அளவில் இருந்தால், சுத்திகரிக்கும் சாதனங்கள் அதை 15 அல்லது 20க்கு கொண்டு வராது. காற்றின் தரம் குறைந்துள்ள நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் வருவதாக சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல குழந்தைகள் அகாலமாக உயிரிழக்கவும் இது காரணமாகிறது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு வட இந்தியாவில் மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இது ஒரு தேசிய அவசர நிலை. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் தரங்குறைந்த காற்று பாதிக்கும். எளிதாக இது ஆஸ்துமா நோய் வர வழிவகுக்கும். டெல்லியில் 1100 குழந்தைகளை ஆய்வு செய்ததில் 3 பேரில் 1 குழந்தை எனும் விகிதத்தில் ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது. தாயின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் இது பாதிக்கிறது. சுமார் 25 சிகரெட் புகைத்தால் வரும் நுரையீரல் நோய்கள், காற்று மாசு காரணமாக புகை பிடிக்காதவர்களுக்கும் வர கூடும்.

    இவ்வாறு டாக்டர். அர்விந்த் கூறினார்.

    Next Story
    ×