search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New low pressure area"

    • மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
    • வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என முன்னதாக அறிவிப்பு.

    வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 21ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்மான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, வரும் 21-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 22, 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 24-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கே வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அடுத்த 24 நேரங்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டது.

    தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

    மேலும், இதுவரும் தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும் என்றும் அந்தமான் கிழக்குப்பகுதியில் இருந்து நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி நகர்ந்து அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப்பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் அடுத்த 24 நேரங்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டது.

    வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அரபிக்கடலில் கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கே வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வட தமிழக கடல் பகுதி தொடர்ந்து சீற்றத்துடனேயே காணப்படுகிறது.
    • இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தகவல்.

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றது. எனினும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.

    மேலும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் வங்கக்கடலில் வரும் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுமா? என்பது குறித்த அதன் நகர்வை பொறுத்துதான் தெரிவிக்க முடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இதனிடையே, தற்போதைய கணிப்பின்படி, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி, இலங்கை மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon
    சென்னை:

    தமிழகத்தையொட்டி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதேபோல் கேரளாவையொட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.



    இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரிய குளத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ., மழை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 செ.மீ., சங்கரன்கோவிலில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுப்பாளையம், சிதம்பரம், தக்கலை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., கழுகுமலை, விருதுநகர், நாகர்கோவில், திருச்செங்கோடு, ராஜபாளையம், போடி, மணியாச்சியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தென்மேற்கு பருவ மழை வடநாட்டின் பல பகுதிகளில் வாபஸ் ஆகிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள ஒருசில இடங்களில் இன்று விலகிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    24 மணி நேரத்தில் அதன் பிறகு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதற்கிடையே தாய்லாந்து வளைகுடாவில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது. வடக்கு அந்தமான் கடல் வரை பரவி இணைந்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon

    ×