என் மலர்
இந்தியா
மீண்டுமா..! தெற்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இறுதியில் ஃபெஞ்சல் புயலாக உருவானது.
- தமிழக மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதன்எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஃபெஞ்சல் புயலாக உருவானது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் 12ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் என்றும கணிக்கப்பட்டுள்ளது.