என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New water tanks"

    • ரூ.13 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
    • மேட்டுப்பாளையம் வனப்ப குதியில் வறட்சி தொடங்கி யுள்ள நிலையில் வனப்பகுதி முழுவதும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனப்பகுதி 10ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதி. இந்த வனப்பகு தியில் சிறுத்தை, புலி, காட்டுயானை, காட்டெருமை, செந்நாய், கரடி என ஏராளமான பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இந்தநிலையில் தற்போது மேட்டுப்பாளையம் வனப்ப குதியில் வறட்சி தொடங்கி யுள்ள நிலையில் வனப்பகுதி முழுவதும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கி யுள்ளது. இதன் கார ணமாக வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருவதால் வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேவை களுக்காக வெளியேறும் நிலை ஏற்படும்.

    குறிப்பாக மேட்டுப்பா ளையத்தில் உள்ள ஜக்கனாரி, கன்டியூர், உலிக்கல் போன்ற வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் அவற்றின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது வனத்துறையினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஏற்கனவே மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்வனப்பகுதியில் உள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளை மேம்ப டுத்தும் பணியில் வனத்து றையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    அத்துடன் நடப்பு பருவத்தில் மட்டும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அடர் வனத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் புதியதாக அமைத்து வருகின்றனர். ஜக்கனாரி காப்பு காட்டில் ரூ.13 லட்சம் செலவில் போர்வெல் அமைத்து சோலார் மூலம் இயங்கும் மோட்டார்களை பொருத்தி தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே உள்ள கசிவு நீர் குட்டைகளில் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி வரும் நிலையில் தற்போ தைய தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வனத்துறையினர் தேவைப் பட்டால் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப உள்ளதாகவும் தெரி வித்தனர். இதன் மூலம் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை அடர் வனத்திலேயே பூர்த்தி செய்யபட்டு வன உயிரினங்கள் வனத்தில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    ×