search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non-Organized Workers"

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் கோபாலசமுத்திரம் சார்பில் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நெல்லை மற்றும் கோபாலசமுத்திரம் சார்பில் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னீர் பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் மற்றும் 200 துணிப்பைகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சட்ட விழிப்புணர்வு உரை ஆற்றினார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். முத்திரை ஆய்வாளர் விஸ்வநாதன், மங்கள் வித்யா பவுண்டேஷன் நிறுவனர் ராகுல், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியன், அருள் முருகன், கோபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணி கைகப்பைகள் வழங்கப்பட்டது.

    ×