search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North State youth arrested for"

    • சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    • சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால் சதீஷ்குண்டுவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 29).

    இவர் தனது அலுவலகத்தில் உள்ள மேஜையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு தனது வருகையை பதிவு செய்ய சென்று விட்டார். பின்னர் பணத்தை சூப்பர்வைசராக வேலை செய்யும் சுஜித்குமார் மாலிக் என்பவருக்கு தர அவரையும் அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு வந்தார்.

    அப்பொழுது அவருடைய அறையில் இருந்து கையில் பணத்துடன் அந்த கம்பெனியின் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்யும், உத்திரபிரதேசம் மாநிலம் கேராம் குடவா பகுதியை சேர்ந்த சதீஷ்குண்டு (வயது 25) வெளியே வந்துள்ளார்.

    உடனடியாக சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால், உடனடியாக சத்தம் போட்டு அங்கிருந்த சூப்பர்வைசர் கோடீஸ்வரன் மற்றும் சுஜித்குமார் மாலிக் ஆகியோர் உதவியுடன் சதீஷ்குண்டுவை கையும் களவுமாக பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×