என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NR Narayana Murthy"
- கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது.
- வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என இருந்ததை 5 நாட்களாக மாற்றப்பட்டது எனக்கு ஏமாற்றத்தை தந்தது.
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். இவரது மனைவி சுதா மூர்த்தி. இவரும் சமூக சேவைகள் மூலம் மக்கள் பணியாற்றி வருகிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும் தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.
அப்போது அவர் கூறும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி கூறிய கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ‛இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்'' என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. இது பெரிய அளவில் விவாதமாக மாறியது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் நாராயணமூர்த்தி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், வேலை-வாழ்க்கை சமநிலை என்ற விஷயத்தில் (Work-life balance) எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது.
இந்தியாவில் வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என இருந்ததை 1986-ல் 5 நாட்களாக மாற்றப்பட்டது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்துவதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.
நாராயணமூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தியின் கணவரான ரிஷி சுனக் முன்னாள் பிரிட்டன் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 6 நண்பர்களுடன் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார், என்.ஆர்.என்.
- விப்ரோவிற்கு பெரும் போட்டி நிறுவனமாக உருவெடுத்தது, இன்போசிஸ்
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம், இன்போசிஸ் (Infosys).
1981ல் இன்போசிஸ் நிறுவனத்தை தனது 6 நண்பர்களுடன் தொடங்கியவர், "இந்திய மென்பொருள் துறையின் தந்தை" என அழைக்கப்படும் என். ஆர். நாராயண மூர்த்தி (77).
சுமார் 3.5 லட்சம் பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மென்பொருள் துறைக்கான கல்வி பயிலும் பல இளைஞர்களுக்கு கனவு நிறுவனமாக திகழ்வது, இன்போசிஸ்.
இன்போசிஸ் துவங்கும் முன்பே 80களில் துவங்கப்பட்ட மற்றொரு மென்பொருள் துறை நிறுவனம், விப்ரோ (Wipro). இதன் தலைவர் அசிம் பிரேம்ஜி (Azim Premji).
தனது ஆரம்ப கால வாழ்வில் செய்த பல முயற்சிகள் குறித்து அவ்வப்போது கருத்துகளை கூறி வரும் நாராயண மூர்த்தி, தான் வேலைக்கு செல்ல முயன்றது குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.
நாராயண மூர்த்தி தெரிவித்ததாவது:
அக்காலத்தில் நான் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினேன். அதற்கென விண்ணப்பமும் செய்தேன். ஆனால், என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
அதற்கு பிறகுதான், நான் என் நண்பர்களுடன் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினேன். அதுதான் இன்போசிஸ்.
இது குறித்து பல வருடங்கள் கழித்து பிரேம்ஜியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என்னை தேர்ந்தெடுக்காமல் விட்டது ஒரு தவறான முடிவு என பிரேம்ஜி தெரிவித்தார்.
ஒரு வேளை பிரேம்ஜி என்னை தேர்வு செய்திருந்தால், எனது வாழ்க்கையும், பிரேம்ஜியின் வாழ்க்கையும் பெரிதாக மாறியிருக்கும்.
இவ்வாறு நாராயண மூர்த்தி கூறினார்.
விப்ரோ மென்பொருள் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக இன்போசிஸ் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் ஒரு பொறியாளர். இன்போசிஸ் தலைமை பொறுப்பில் அமர அவர் விரும்பியும், நாராயண மூர்த்தி மறுத்து விட்டார்.
இது குறித்து சில தினங்களுக்கு முன் பேசிய நாராயண மூர்த்தி, "எங்கள் 7 பேரையும் விட மிகுந்த திறமைசாலியான சுதாவை தலைமை பொறுப்பிற்கு வர அனுமதிக்காதது, நான் செய்த மிக பெரும் தவறு" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தான் செய்த தவறையும், பிரேம்ஜி செய்த தவறையும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பயனர்களால் விவாதிக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்