search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of her jewelry Construction"

    • இது குறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சென்னிமலை போலீசார் அஜயை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து அஜயை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே தோப்புப்பாளையம் எம்.பி.என்., காலனியைச் சேர்ந்தவர் கவின்குமார்(23)கவின்குமார் தனது தாய் சாந்தியுடன் கடந்த 21-ந் தேதி சென்னிமலை வார சந்தைக்கு வந்து விட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது மொபட்டை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சாந்தியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டார்.

    அப்போது சங்கிலியை சாந்தி கெட்டியாக பிடித்து கொண்டதால் 1½ பவுன் அளவுள்ள தங்க சங்கிலி மட்டும் மர்ம நபர் பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் அருகே பெருந்தொழுவு ரோடு, அமராவதி நகரை, சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜய் (23) என்பவர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னிமலை போலீசார் அஜயை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து அஜயை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர். 

    ×