search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPENING OF THE GATES OF HEAVEN"

    • திருப்பத்தூர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து உற்சவரான நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    அதன் வழியாக சுவாமி வலம் வந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தது. சுவாமியைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிலை வலம் வந்தனர். பின்னர் பெருமாள் திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்குகிறது.
    • பகல்பத்து உற்சவம் 23-ந்தேதி முதல் தொடங்கி 2023 ஜனவரி 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    திருச்சி,

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக விழாவையொட்டி, ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று (14-ந்தேதி, திங்கட்கிழமை) மதியம் 12 மணி முதல் 12.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள், பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி தொடங்குகிறது.

    அதனையடுத்து பகல்பத்து உற்சவம் 23-ந்தேதி முதல் தொடங்கி 2023 ஜனவரி 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். பகல் பத்து முதல் நாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வருவார். அன்று அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (1.1.2023) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    2.1.2023 (திங்கட்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். அன்றைய தினம் அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத் தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 8.1.2023 அன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9.1.2023 அன்று திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 10.1.2023 அன்று தீர்த்தவாரியும், 11.1.2023 அன்று நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

    ×