என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Paddy purchase station"
- உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டில் கல்லாபுரம், ராமகுளம் ராஜ வாய்க்கால் பாசனத்தில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
- வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.
உடுமலை:
உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டில் கல்லாபுரம், ராமகுளம் ராஜ வாய்க்கால் பாசனத்தில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில் 3,200 ஏக்கரில் நெல்நடவு செய்துள்ளனர்.இப்பகுதிகளில் பழைய ஆயக்கட்டுகால்வாய்கள் தூர்வாரும் பணி தாமதமாக துவங்கியதால் சாகுபடி பணிகளும் தாமதமானது.தற்போது இரண்டாம் பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமராவதி, பூச்சிமேடு, கல்லாபுரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.தொடர்ந்து பூளவாடி, வேல்நகர், மாவளம்பாறை பகுதிகளில் இம்மாத இறுதியில் அறுவடை பணி துவங்க வாய்ப்புள்ளது.
நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ருத்ராபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை மீண்டும் துவக்கி கால நீடிப்பு வழங்கவும், தேவையான அறுவடை எந்திரங்கள் கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பாசன பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. ஒரு மாதம் வரை அறுவடை நீடிக்கும்.நிலையிலுள்ள நெற் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்க வேண்டும். அறுவடைக்கு தேவையான எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை காயவைக்க போதிய உலர்கள வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வசதியில்லாததால் ஒவ்வொரு சீசனிலும் சிரமப்படுகிறோம்.கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் ருத்ராபாளையத்தில் துவக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன் மூடப்பட்டது.
வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. அரசு கொள்முதல் மையத்தில் 2,160 ரூபாய் வழங்கப்படுகிறது.தற்போது அறுவடை சமயத்தில் நெல் கொள்முதல் மையம் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் மீண்டும் செயல்படும் வகையில் கால நீடிப்பு செய்ய வேண்டும் என்றனர்.
- வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
- சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
சிவகிரி:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் தென்மலை குமார், முருகன்சாமிநாதன், கிளைச் செயலாளர்கள் கருத்தப்பாண்டியன், முருகேசன், பாபுராஜ், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடம்
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத் தலைவர் காளீஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, குருநாதன், ஊராட்சி மன்ற செயலர் உமாமகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், மைதீன்கனி, முருகன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி மையம்
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நாரணாபுரம் கிராம ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடமும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராம், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத் தலைவர் திருமேனிராஜ், ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதி அந்தோணி, அங்குராஜ், வார்டு உறுப்பினர்கள் மாடசாமி, மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- கடையம் அருகே அமைந்துள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் மூலம் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
- அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இப்பகுதியில் இல்லாததால் இடைத்தரகர்கள் அதிக லாபம் அடைகின்றனர்.
கடையம்:
கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில், கடையம் அருகே அமைந்துள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் மூலம் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் விளை யக்கூடிய நெல்களை கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையம் இல்லை. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்ற னர்.
எனவே ராமநதி அணை செல்லும் சாலையில், மரிமேடு என்னும் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டும். அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இப்பகுதியில் இல்லாததால் இடைத்தரகர்கள் அதிக லாபம் அடைகின்றனர் . மேலும் விவசாயிகளுக்கு இழப்பும் ஏற்படுகிறது .
எனவே இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
- அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யிலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் தங்களது நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் இங்கு வரும் விவசாயிகளிடம் அத்து மேரி அதிகாரமாக பணம் வசூல் செய்வதாக தெரியவருகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் வார்டு உறுப்பினர் முரளியிடம் சென்று ஏன் அதிகமாக பணம்வசூலிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறில் இருத ரப்பை சேர்ந்த வர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து பின்னர் இருத ரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்அவர்களிடம் விசாரணைசெய்து வருகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்