என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Panchayat Union School"
- சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
- மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.
திருப்பூர்:
பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.
குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.
தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
- புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.
பெருமாநல்லூர், செப்.27-
திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோதிநாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் தனபால் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.
- கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பின்னர் அங்குள்ள சத்துணவுகூடம், மாணவர் வருகை பதிவேட்டை பார்வையிட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு அங்குள்ள சத்துணவுகூடம், மாணவர் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். மாநில அளவில் நடந்த சிலம்பு போட்டியில் முதலிடம் பிடித்த 8-ம் வகுப்பு மாணவர் முத்து சுரேஷ்சை பாராட்டினார். அப்போது அவருடன் குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், துணைத்தலைவர் அனிஷா பயாஸ், ராதாபுரம் யூனியன் ஆணையாளர்கள் பிளாரன்ஸ் விமலா, ராஜேந்திரன் உள்பட பலர் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்