search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni Uthra Chariot at"

    • இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று சேவல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக நேற்று காலை சாமி புறப்பாடு நடந்தது, சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கு இருந்து சேவல் கொடியுடன் உற்ச மூர்த்திகள் முருகப்பெ ருமான் சமேதராக புறப்ப ட்டு படி வழியாக மலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் யாக பூஜை நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் பஞ்சாமிருதம், பால், தயிர் உட்பட பல்ேவறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சாமி களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமைக் குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் கொடி மரத்திற்கும் காப்பு கட்டி சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு டவுன் கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதையடுத்த நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை மகா தரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியா ளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    ×