search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris Masters title"

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான ரூப்லெவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-7 (6-8), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த்உ, தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் பெரேட்டினி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோலவி அடைந்தார்.

    • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் திடீரென விலகினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர் திடீரென விலகியுள்ளார். வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என நோவக் ஜோகோவிச் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை 7-5, 6-4 என தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார் கரேன் கச்சனோவ் #ParisMasters
    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், தரநிலைப் பெறாத ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

    கச்சனோவ் அரையிறுதியில் 6-ம் நிலை வீரரான தியேம்மையும், காலிறுதியில் 4-ம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரேவையும் வீழ்த்தியிருந்தார். ஜோகோவிச் அரையிறுதியில் 3-ம் நிலை வீரரான பெடரரையும், காலிறுதியில் 5-ம் நிலை வீரரான மரின் சிலிச்சையும் வீழ்த்தியிருந்தார்.

    தரநிலை பெறாத வீரர் என்பதால் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கசச்சனோவ் விளையாடினார்.

    முதல் செட்டை 7-5 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக மாஸ்டர்ஸ் டைட்டிலை கைப்பற்றியுள்ளார்.
    ×