search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parithabangal Sudhakar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது.
    • பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது டிஜிபியிடம் தமிழக பாஜக புகார் அளித்தது.

    திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

    லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்தார்.

    இந்நிலையில், 'லட்டு' வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது.
    • சமூக வலைத்தளங்களில் லட்டு பரிதாபங்கள் விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

    லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    அந்த புகாரில், 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர். ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை இழிவுபடுத்தியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளதாக படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய் குமார் கூறினார். #Uriyadi2 #VijayKumar
    இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகினாலும், தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடி படத்தில் பேசிய சாதிய அரசியலை, இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 படங்கள் பற்றி பேசினார்.

    "தற்போதைய சமூகத்தில் சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம். எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளது.

    இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். உறியடியில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணிபுரிந்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. #Uriyadi2 #VijayKumar

    உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமான விஜய குமாரின் அடுத்த படமான உறியடி 2 படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். #Uriyadi2 #Uriyadi2FirstLook
    `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

    அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். இது தயாரிக்கும் 7-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.

    விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்' பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். `உறியடி' முதல் பாகத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

    விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ள கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லினு என்ற புதுமுகம் படத்தொகுப்பையும், ஏழுமலை ஆதிகேசவன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துடன் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

    உறியடி படம் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்த விஜய குமார், சூர்யா நிறுவனத்துடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. #Uriyadi2 #Uriyadi2FirstLook

    ×