search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participating"

    • செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சையத் அன்வர் தலைமை தாங்கினார். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் அப்துல் மஜீத் மற்றும் அனைத்து பள்ளிவாசல் பட்டேல்கள், முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர். ஆபீஸ் ஜாஹீர் ஆலம் இறைவணக்கம் செய்தார். சித்திக் ஹஸ்ரத் மன்பா வரவேற்றார். முகமது அஷ்ரப் தொகுத்து வழங்கி னார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ,பேரூராட்சி கவுன்சிலர் சங்கர் ,தி.மு.க. நகர செயலாளர் காஜா நசீர், ஆதில் பாஷா, அம்ஜத் பாண்டே மாவட்ட பிரதிநிதி ஜெ.எஸ்.சர்தார், தொண்டர் அணி பாஷா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர். சையத் சாதுல்லா நன்றி கூறினார்.

    • மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
    • மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர் நாடு. இதனை சார்ந்தது ஒத்தப்பட்டி. இங்குள்ள மந்தை கருப்பணசாமி மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாய் பகுதியில் தொழு அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மேலூர், வெள்ள லூர், உறங்கான்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தது. இதையொட்டி கிராமத்தின் சார்பில் ஜவுளி பொட்டலங்கள் கொண்டு வந்து காளைகளுக்கு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது. இதில் ஏராளமான மாடுகளை வீரர்கள் பிடித்தனர். மாடுகளை பிடிக்கும்போது 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் வெள்ளலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழவளவு போலீசார் செய்திருந்தனர்.

    ×