என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Passenger suffering"
- டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.
மீனம்பாக்கம்:
டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.
ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
- ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்றது. நேற்று இரவு 9 .20 மணியளவில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடக்க முயன்ற போது சுங்கவரி செலுத்தாததால் விழுப்புரம் நோக்கி செல்லவிடாமல் அந்தபஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் தவித்தனர்.
மேலும் பஸ்சில் வந்த பயணிகள் விழுப்புரம் ெரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டம் நோக்கி செல்லும் ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு இரவு 10.05 மணிக்கு விழுப்புரம் நோக்கி சென்ற வேறு அரசு பஸ்சில் பயணிகள் ஏறி சென்றனர்.இதனால் டோல் பிளாசா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 பஸ்கள் உள்ளது.
- தற்போது வெறும் 13 பஸ்கள் மட்டுமே பல்வேறு குறைகளோடு ஓடிகொண்டிருக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், சென்னை, கோயம்புத்தூர் திருப்பதி, உள்ளிட்ட வழித்தடங்களில், 100-க்கும் மேற்பட்ட தொலைதூர பஸ்களும், உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 பஸ்கள் உள்ளது.
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, அண்மையில் பல்வேறு பஸ்கள் புதிதாக வாங்க ப்பட்டு இயக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலிருந்து 15 ஆண்டுகளை கடந்து இயக்கப்பட்ட 22 பஸ்களின் இயக்கத்தை பி.ஆர்.டி.சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில், தற்போது வெறும் 13 பஸ்கள் மட்டுமே பல்வேறு குறைகளோடு ஓடிகொண்டிருக்கிறது.
குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்ப கோணம், திரு.பட்டினம், பூவம், அம்பகரத்தூர், திரு நள்ளாறு, சங்கரன்பந்தல், விழிதியூர் உள்ளிட்ட ஏரா ளமான வழித்தடங்களில் பிஆர்டிசி பஸ் இயங்காமல் முடங்கி இருப்பதால், வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் பஸ்களின் முடக்கம் குறித்து காரணம் தெரியாமல், தினசரி பஸ் வரும் என பஸ் நிலையத்திலும், சாலை யோரங்களிலும் காத்திருந்து ஏமாந்து செல்லும் அவலநிலை உருவாகி யுள்ளது.
எனவே, புதுச்சேரி அரசு நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனே இயக்க வழிவகைச் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் புதுச்சேரி போக்குவரத்துறை அமை ச்சராக காரைக்காலை ச்சேர்ந்த அமைச்சார் சந்திர பிரியங்கா இருப்பதால், இதற்கு தார்மீக பொறுப்பெர்று பஸ்களின் இயக்கத்தை விரைந்து கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானம் 45 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி மீண்டும் புறப்படுவதற்கு தயாராகியது.
- விமானத்தின் கதவு மூடப்பட முடியாத காரணத்தினால் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புது டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர விமான சேவையாக பெங்களூரில் இருந்து இண்டிகோ விமானம் இரவு 10.05 மணிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானம் 45 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி மீண்டும் புறப்படுவதற்கு தயாராகியது.
அந்த நிலையில் விமானம் புறப்படுவதற்காக பயணிகள் ஏறுவதற்காக பயன்படுத்தப்பட்ட முன்பக்க கதவுகளை மூடுவதற்காக விமானி முற்பட்டபோது விமான கதவுகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த கதவானது மூட முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் இந்த விமானத்தில் உயர் அதிகாரிகள் பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கதவு மூடப்பட முடியாத காரணத்தினால் உடனடியாக இண்டிகோ விமானத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து அதனை சீர் செய்யும் பணியில் விமான நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி நள்ளிரவு ஒரு மணி அளவில் தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டு கதவு மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு1.10 மணிக்கு பெங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
- இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.
- ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை ரெயில் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரெயில் நிலையம் பிளாட் பார்ம் 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் பெண்கள், குழந்தைகள், இருட்டாக உள்ளதால், ஒரு வித அச்சத்துடன் வெளியில் வர வேண்டியுள்ளது. எனவே, மின் விளக்குகள் எரியவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் ெரயில்வே துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்