என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasumpon Muthuramalinga Devar college"

    • தென் மண்டல அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது
    • போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றன

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தென் மண்டல அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை தென்காசி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் ப. மு.தேவர் கல்லூரியும் இணைந்து நடத்தியது. போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றன. போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணியினர் முதல் இடமும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 2-ம் இடமும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி. எஸ். ஹிந்து பள்ளி 3-ம் இடமும், கோவில்பட்டி நாடார் பள்ளி அணியினர் 4-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் தென்காசி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது,

    பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் ஹரிகெங்காராம், மாவட்ட கைப்பந்து கழக துணை தலைவர் விவேக் ராஜ், செயலர் ரமேஷ்குமார், நெல்லை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சந்திரகுமார் மற்ற அணி மேலாளர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் வேணுகோபால் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சத்யகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்கள். போட்டி ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்து இருந்தார்.

    ×