என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pathirakalliamman Temple"
- நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இன்று இரவு 9 மணிக்கு கோவில் முன்பு அமைந்து உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மேலக்கரந்தை சந்தன செல்வி- நாகலட்சுமி குழுவினர் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
கலை நிகழ்ச்சிகள்
விழாவையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு நடைதிறப்பும், காலை 9 மணிக்கு காலை பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6 மணிக்கு கோவில் முன்பு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை யும், மாலை 5 மணிக்கு பெண்கள் ஊர்வலம் நடைபெற்றது.
அக்னிசட்டி ஊர்வலம்
இதைத்தொடர்ந்து பூச்சட்டிகள் 21 அக்னிசட்டி, 51 அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடை யின் கீழ் வீற்றிருக்கும் தங்க குடம் வாலி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக் கோளத்துடன் வீதி விழா வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகப்படி தாரர்கள் சார்பில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று அதிகாலையில் பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுவிழா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க முளைப்பாரி ஊர்வலத் துடன், மேள தாளத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று இரவு 9 மணிக்கு கோவில் முன்பு அமைந்து உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மேலக்கரந்தை சந்தன செல்வி- நாகலட்சுமி குழுவினர் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்