search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PATRON FESTIVAL"

    • அரளிகோட்டையில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளிகோட்டை கிராமத்தில் கோசியப்ப அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடந்தது.

    திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள் முழங்க மண் குதிரைகளை சுமந்து வந்து கோவில் முன்பாக கொண்டு வந்து சேர்த்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மந்தை எனப்படும் சவுக்கையில் தாரை தப்பட்டையுடன் இளைஞர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தனது பிறந்த ஊர் என்பதால் விழா தொடக்கத்தில் இருந்து பொதுமக்களோடு மக்களாக இணைந்து திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அரளி கோட்டை கிராமத்தார்கள் மற்றும் கோசியப்ப இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • துவரங்குறிச்சி அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    • தெய்வங்கள்-விலங்குகளின் சுடுமண் சிலைகளை சுமந்து சென்ற பக்தர்கள்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள மாங்கனாபட்டியில் சின்னக்கன்னிமார், வில்லுக்காரன் கோவில்கள் அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் புரவி எடுத்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் விழாவானது நேற்று மாலை நடை பெற்றது. மாங்கனாபட்டி காளியம்மன் கோவிலில் இருந்து விநாயகர், வில்லுக்காரன், சின்னக்கன்னிமார், கிருஷ்ணர், குதிரை, ஆடு, மாடு, நாய், கோழி, மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடுமண் சிலைகளை நேர்த்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தங்கள் தலையில் சுமந்து கொண்டு மாங்கனாபட்டி மலையில் உள்ள சின்னக்கன்னிமார், வில்லுக்காரன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் இரும்பினால் செய்யப்பட்ட வேல், சூலாயுதம், வில் அம்புகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மலையடிவாரத்தில் சிலைகளை இறக்கி வைத்த பக்தர்கள் அங்கு சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகளின் கண் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சிலைகளை தலையில் சுமந்தவாறு கோவிலுக்குச் சென்றனர். அங்கு தரையில் தரையில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கொரோனா பெருந்தொற்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இவ்விழாவில் எண்டபுளி, மாங்கனாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×