search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavoorchathiram"

    • பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தென்காசி:

    பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவிற்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சங்க தலைவரும், வணிகர் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் கே.என்.எஸ். குழுமம் நாராயண சிங்கம், சேவியர் டிம்பர்ஸ் உரிமையாளர் சேவியர் ராஜன், எஸ். பி.கே.டிரேடர்ஸ் கண்ணன் ஆகியோரும், குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதி ெசல்வன், அருணோதயம், வெள்ளப்பாண்டியன், சந்தை மட்டன் ஹோட்டல் லிங்கதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி வரவேற்புரை ஆற்றினார்.

    விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, மன்ற செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன், துணைச்செயலாளர் பால் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கபாடி குழு, சிவந்தி ஆதித்தனார் கால்பந்து கழகம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


    • பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பேனர்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • குறிப்பிட்ட சில கட்சிகளின் பேனர்கள் மட்டும் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டு இருப்பதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பேனர்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில கட்சிகளின் பேனர்கள் மட்டும் மர்மநபர்களால் கிழிக்கப்பட்டு இருப்பதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சென்னல்தா புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த மகாராஜா(வயது 27), அதே பகுதியைச் சேர்ந்த வைகுண்ட ராஜா(28), பழைய வேத கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் (27), நாட்டார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பொன்மாரி(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
    • நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் முருகன் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆய்வுபணி மேற்கொண்டு இருந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா தடுத்து நிறுத்தினார்.
    • பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 டிராக்டர்களையும் பறிமுதல்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தில் இருந்து உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி சென்ற 4 டிராக்டர்களை ஆய்வுபணி மேற்கொண்டு இருந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா தடுத்து நிறுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் குறும்பலாப்பேரியை சேர்ந்த அமல்ராஜ்(வயது 56), அம்பை மன்னார்கோவிலை சேர்ந்த பிரகாஷ்(23), வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த யோகேஷ்(20), மணிகண்டன்(21 )ஆகியோரை கைது செய்தனர். 

    ×