search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Grievance Day"

    • திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது.
    • வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    திருப்பூர்-

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை ஏ.விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

    கடிதத்தின் மீது DAK ADALAT CASE என்று தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் கடிதம் அனுப்பி வைக்கலாம் என்று திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
    • கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை யில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நல துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4-மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் ரூ.48 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ரூ.17 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.65 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலு வலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×