என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permanent visa"

    • பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும்.
    • குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.

    இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில்," கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்.

    பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றார்.

    அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.

    ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.

    • யுவராஜூக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது
    • இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

    கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    நேற்று முன் தினம் [ஜூன் 8] 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

     

    ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×