search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition at the office of the Collector"

    • சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    அரசு நிலம்

    சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுர் பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதி மக்களுக்கு சமுதாய கூடமும், மயானமும் அமைத்து தர பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே எங்களது நீண்ட நாள் கோரிக்கையான மயானமும், சமுதாய கூடமும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அரசு பள்ளிக்கு

    கூடுதல் வகுப்பறை

    சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-கொண்டப்ப நாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் 730 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் போதிய கட்டிட வசதி, கழிவறை வசதி இல்லை. நூலகம், ஆய்வகம், கணினி அறைகளை வகுப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் வரண்டாவில் அமர்ந்து கற்கும் நிலையும் உள்ளது. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இது சம்பந்தமாக பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வகுப்பறைக்கு போதுமான கட்டிடம் கட்டுவதுடன் கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
    • தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள வெள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கலப்பு திருமண தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது அருண்குமார் கூறியதாவது:-

    பெற்றோர் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனது உறவினரான தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×