search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plane crashes"

    • சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.
    • காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.

    ஏதென்ஸ்:

    ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது.

    குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீசில் உள்ள ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல் சோர்பு மற்றும் எவியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மேலும் விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

    இந்த நிலையில் எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கியது.

    சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 2 விமானிகள் இருந்தனர். காட்டுத்தீ மீது தண்ணீரை ஊற்றி விட்டு அந்த விமானம் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.

    தரையில் மோதிய விமானம் வெடித்து சிதறியதால் தீ பிழம்பு எழுந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானிகள் 2 பேர் பலியானதையடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.

    நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். #nepalplanecrash

    காத்மண்டு:

    நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.

    படுகாயம் அடைந்த மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் தவிர ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த விமான கேப்டன் ஆர்.பி. ரொசாயா, கேப்டன் சேட் குரங் ஆகியோர் காயம் அடைந்தனர். #nepalplanecrash

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட இருவர் உயிரிழந்தனர். #2dead #smallplanecrashes #Floridaplanecrash
    நியூயார்க்:

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்தில் இருந்து நேற்று அம்மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹில்லியார்ட் நகரை நோக்கி நேற்று பிற்பகல் ஒரு செஸ்னா 335 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது.

    சிறிது தூரம் சென்றதும் வழியில் நிலைதடுமாறி, மிகவும் தாழ்வாக பறந்த அந்த விமானம் ஃபோர்ட் லாடெர்டேல் நகரில் மனஇறுக்கம் (ஆட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சி மையம் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின்மீது பயங்கரமாக மோதியது.


    இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீபிடித்து எரிந்து சாம்பலானது. அதில் இருந்த விமானி மற்றும் ஒரு பயணி இருவரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அந்த கட்டிடத்தின் சிறிய பகுதியும் தீயால் நாசமடைந்தது. அங்கிருக்கும் பயிற்சி மையத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் இந்த விபத்தில் காயமடைந்தார். #2dead #smallplanecrashes #Floridaplanecrash
    ×