என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
    • கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.

    இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    உலகத் தலைவர்களுடன் நான் உரையாடும் போதெல்லாம், விரிவான கலந்துரையாடல்களில், இந்தியா நடுநிலையானது அல்ல என்று நான் எப்போதும் கூறுவேன். இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அந்தப் பக்கம் அமைதி. அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம், அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். இடையே உலகத் தலைவர்களிடம் வலியுறுத்துகிறோம்.

    கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. மிக விரைவில், உலகம் கவலைகளிலிருந்து விடுபட்டு, உலக சமூகத்திற்கு சரியான திசையில் ஒரு புதிய நம்பிக்கை எழும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
    • பிரதமர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    டெல்லியில் இன்று நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கைகலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை புதின் ஏற்றுக்கொண்டார்.

    அங்கிருந்து புறப்பட்ட புதபின் ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.

    பின்னர் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது கேள்வி எழுப்பினார்.
    • நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை.

    டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது, ஒரு டாலருக்கு ரூ.90க்கும் கீழே சரிந்துள்ளது.

    நேற்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 28 பைசாக்கள் சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூ.90.43 ஆகக் குறைந்தது.

    இந்நிலையில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "ரூபாய் மதிப்பு ஏன் சரிந்து வருகிறது? பிரதமரிடம் நரேந்திர மோடியின் கேள்வி" என்ற தலைப்பில் மோடியின் வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

    அந்த வீடியோவில், "நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.

    • ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
    • பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார்.

    தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.

    • நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.
    • தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன.

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு.

    * பீகாரில் நடந்து முடிந்து தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு கூறியுள்ளது.

    * நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.

    * குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    * இந்த கூட்டத்தொடர், இந்த நாடாளுமன்றம் நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறது, நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை, வலுவான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்.

    * தோல்வியின் ஏமாற்றத்தை அவர்கள் கடக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன. பீகார் முடிவுகள் வந்து இவ்வளவு நாள் கடந்துவிட்டதால், அவர்கள் கொஞ்சம் அமைதியடைந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் நேற்று நான் கேள்விப்பட்டதிலிருந்து, தோல்வி அவர்களை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.

    * விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார். 



    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
    • காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

    தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. நான் காசி தமிழ் சங்கமம் பற்றிப் பேசுகிறேன். 4-வது காசி தமிழ் சங்கமம் வருகிற 2-ந் தேதி வாரணாசியில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. அது தமிழ் கற்க என்பதாகும்.

    காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சிறந்தது. தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பாரதத்தின் பெருமை.

    விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்து உள்ளது.

    இளைஞர்களின் அர்ப்பணிப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பு வளர்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்

    வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, மத்திய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட் டம் மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது ஆகியவை இந்த மாதத்தில் நடந்த உத்வேககரமான முன்னேற்றங்களில் அடங்கும்.

    இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

    நாடு முழுவதும் தேனீ வளர்ப்பு முயற்சிகள், விளையாட்டுத் துறையில் சாதனைகள், 2030-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா வென்றது. ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசினார்.

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஹேடன் என்பரை இன்று திருமணம் செய்து கொண்டார்
    • ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    2022 முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானீஸ்க்கு வயது 62. தனது காதலியான 46 வயது ஜோடி ஹேடன் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஜோடி ஹேடனிடம் அல்பானீஸ் காதலை கூறிய நிலையில் இன்று பிரதமர் குடியிருப்பில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் ஒருவர் தன் பதவிக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறை.

    இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

    2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்

    கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிலையில், கர்நாடகாவின் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கோவா பயணமானார். அங்கு மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை திறந்துவைத்துள்ளார்.

    இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
    • அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயற்கை பேரிடரால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

    நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR உதவியை அவசரமாக அனுப்பியுள்ளது. மேற்கொண்டு உதவி மற்றும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இந்தியா அதன் தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1 லட்சம் பேர் கீதை பாராயணம் செய்யும் லட்ச கீதை பாராயண நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மங்களூரு வந்தார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் ரோடு ஷோவாக வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தங்க கதவை திறந்து கோவிலுக்குள் சென்று மத்வ சரோவரில் தீர்த்த அபிஷேகம் செய்து கிருஷ்ணரை தரிசனம் செய்தார். தொடர்ந்து தங்க தீர்த்த மண்டபம் வழியாக கிருஷ்ண மடத்தின் மடாதிபதி தீர்த்த சுவாமிகளை சந்தித்து தீர்த்த பிரசாதம் பெற்றார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி லட்ச கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கோவா புறப்பட்டு செல்கிறார்.



    ×