என் மலர்tooltip icon

    கோவா

    • கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வரும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
    • இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார்.

    பனாஜி:

    நாடு முழுவதும் பா.ஜ.க. நிறுவன தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக கோவாவின் பனாஜியில் அடல் ஸ்ம்ருதி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பிரமோத் சாவந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வரும் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இரு தென் மாநிலங்களும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

    அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானியின் காலத்தில் தொடங்கிய பணிகள் இப்போது பலனளிக்கின்றன. இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார். பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தினார். சோதனைகளை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை உலகிற்கு காட்டினார்.

    நாட்டில் மொபைல் போன் புரட்சியில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார். நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்தக் கருத்தை அவர் கொண்டு சென்றார் என தெரிவித்தார்.

    • சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

    மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

    உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும்.

    அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், "கடைசி இரண்டு ஆண்டுகளாக நான் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளேன். உங்களுக்கு என்னுடைய சிம்பிள் அட்வைஸ் என்னவென்றால், நீங்களும் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துங்கள். குறிப்பாக டுவிட்டரை தவிர்ப்பது நல்லது. என் அனுபவத்தில் இதை சொல்கிறேன். இதைப் பார்த்து எலான் மஸ்க் ஒருவேளை என் டுவிட்டர் கணக்கை முடக்கினால், அதுவே எனக்கு வெற்றிதான்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது
    • கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

    கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் [nautical miles] தூரத்தில் வைத்து இந்த விபத்து நடந்துள்ளது.

    13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கோப்புப் படம்

     

     காணாமல் போனவர்களை தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது . தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) மூலம் தேடுதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார்.
    • கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார்.

    இந்திய கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கடந்த 2022-ம் ஆண்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.20 கோடி செலவில் இந்த கப்பல் அதிநவீன ஆட்டோமெடிக் அம்சங்களுடன் கட்டப்பட்டது. சுமார் 262.5 மீட்டர் நீளமும், 61.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் 43 ஆயிரம் டன் எடை கொண்டது. இதுவரை கட்டப்பட்ட கப்பல்களில் இதுதான் மிகப்பெரிய கடற்படை கப்பலாகும்.

    இது 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரானது. இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாக்கிய எந்திரங்கள், உபகரணங்கள் மூலம் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது.

    இந்த போர்க்கப்பலில் மிக் 29 கே. ரக போர் விமானம், கமோல் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்.60 ஆர். மல்டி போர் ஹெலிகாப்டர் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் நிறுத்தி வைக்கலாம்.

    அதி நவீன வசதிகளுடன் உருவான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் நீர் மூழ்கி கப்பல் பயிற்சிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் புறப்படுதல், தரை இறங்குதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது.

    இந்த கப்பலில் 2,200 பெட்டிகள் உள்ளது. பெண் அதிகாரிகள், மாலுமிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 1,600 பேர் இந்த கப்பலில் தங்கி கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இக்கப்பலில் உள்ளது.

    இந்திய கடற்படையில் ஒரு மைல்கல்லாக திகழும் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதற்காக அவர் இன்று கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி முர்முவை கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர் கோவா கடற்கரையில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்க்கப்பலில் பயணம் செய்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவர் முதன் முறையாக போர் கப்பலில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார். கப்பலின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் குறித்து கடற்படை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

    • பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை கொண்டு 130 சதுர மீட்டர் பரப்பளவில் உடனடி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.
    • 21 பேர் கொண்ட குழு இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டது.

    பனாஜி:

    கோவா யூனியன் பிரதேசத்தின் பாம்போலிம் பகுதியில் உள்ள டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று ஒரு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஒரு சுற்றுலா அமைப்பு, ஒரு கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகள் இணைந்து, திறன்பெற்ற தொழிலாளர்களை நம்பி இருக்காமல் ஒரு முன்மாதிரி வீட்டை உடனடியாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை கொண்டு 130 சதுர மீட்டர் பரப்பளவில் உடனடி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. 10 மணி நேரம் 30 நிமிடங்களில் வீடு கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டது. 21 பேர் கொண்ட குழு இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டது.

    நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த கட்டுமானம், அதிகமான மக்களை கவரும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு பெருமிதம் தெரிவித்தது.

    • 1.9 கி.மீட்டர் தூரம் நீச்சல் அடித்து செல்ல வேண்டும்.
    • 90 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

    கோவாவில் அயன்மேன் 70.3 சேலஞ்ச் (Ironman 70.3 challenge) நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வின் 33 வயதான தேஜஸ்வி சூர்யா எம்.பி. கலந்து கொண்டார். இந்த சேலஞ்ச் டிரையத்லான் சேலஞ்ச் ஆகும். 1.9 கி.மீட்டர் தூரம் நீச்சல் அடித்து செல்ல வேண்டும். 90 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். 21.1 கி.மீட்டர் தூரம் ஓட வேண்டும். மொத்தம் 90.3 மைல் (113 கிலோ மீட்டர்) ஆகும். இதை தேஜஸ்வி சூர்யா எம்.பி. முழுமையான கடந்து அசத்தினார்.

    பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யான தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்க பதிவில் "பாராட்டுக்குரிய சாதனை! இது இன்னும் பல இளைஞர்களை உடற்தகுதி தொடர்பான செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆர்வாக கலந்து கொள்வார்கள். இந்த வருடம் மத்திய மற்றும் மாநில அரசியல் பணிபுரியும் 120 பேர் காலந்து கொண்டனர். இதில் 60 சதவீதம் பேர் முதல் தடவையாக கலந்து கொண்டனர்.

    • சிஏஏ மூலம் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில். மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    சிஏஏ மூலம் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவரான ஜோசப் பிரான்சிஸ் பெரேராவிற்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இன்று குடியுரிமை வழங்கினார். கோவா மாநிலத்தில் இருந்து குடியுரிமை பெறும் முதல் நபர் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோசப் பிரான்சிஸ் பெரேரா கோவா மாநிலத்தை சேர்ந்தவர். 1961 ஆம் ஆண்டு போர்த்துகீஸ் நாட்டிலிருந்து கோவா விடுதலை அடைவதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானிற்கு படிப்பிற்காக சென்றுள்ளார். பின்னர் பாகிஸ்தானில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே குடியுரிமையும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடிபெயர்ந்த அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், குடியுரிமை திருத்தச்சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.
    • தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    கோவா அருகே வணிக சரக்குக்கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். IMDG எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்த்து. அப்போது சார்ட் சர்கியூட் காரணமாக  கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.

    கப்பல் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் இந்திய கடலோரக் காவல்படையினர் 2 படகுகளில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    • பா.ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது.
    • சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

    பனாஜி:

    கோவாவின் பனாஜி அருகே உள்ள தாலிகோவாவில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், பா.ஜ.க. மாநில தலைவர் சதானந்த் தனவாடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசிய தாவது:-

    பா.ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது. அதனால் தான் வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    நாமும் அதே தவறுகளை செய்தால், காங்கிரஸ் வெளியேறுவதிலும், நாம் ஆட்சிக்கு வருவதிலும் எந்த பயனும் இருக்காது. மற்ற கட்சிகளில் இருந்து நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    வரும் நாட்களில் அரசியல் என்பது சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான கருவி என்பதை கட்சி தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

    சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளேன். சாதியை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    மேலும் 2027-ம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியை வலுப்படுத்துமாறு கோவா மாநில பா.ஜ.க. தொண்டர்களை கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வடபாவை வாங்கி சாப்பிடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார்.
    • வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

    உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் சுவிட்லானா ஹயென்கோ. சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் கோவா நகரை சுற்றி பார்ப்பதற்காக சுவிட்லானா வந்துள்ளார். அப்போது அங்குள்ள தெருவோர ஓட்டல் ஒன்றில் வடமாநிலங்களில் பிரசித்திபெற்ற சிற்றுண்டியான வடபாவ் விற்பதை பார்த்துள்ள அவர் அதனை ருசி பார்க்க விரும்பினார்.

    பின்னர் வடபாவை வாங்கி சாப்பிடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வடபாவை ருசிக்கும்போது சுவிட்லானாவின் முகபாவனைகளை இணையவாசிகள் ரசித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • நேபாள மேயர் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்
    • கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோரிக்கை

    கோவாவில் தங்கி இருந்த தனது மகளை காணவில்லை என்று நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால் தெரிவித்துள்ளார்.

    36 வயதான ஆர்த்தி ஹமால் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து சில மாதங்களாக தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    இந்நிலையில், மார்ச் 25 இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே இருந்த ஆரத்தி, அதற்கு பின் காணவில்லை என அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

    கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோபால் ஹமால், சமூக வலைத்தளங்களில் உதவி கோரியுள்ளார்.

    இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள கோவா காவல்துறை, ஆர்த்தியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

    • கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
    • குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடி இன்று காலை கோவாவுக்கு சென்றார். அங்கு அவர் ஒ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் திறந்து வைத்தார். மேலும் 2024 இந்திய எரிசக்தி வாரத்தைத் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடி இன்று பிற்பகலில் வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகம், தெற்கு கோவாவில் 100 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதியை தொடங்கி வைக்கிறார். பனாஜி மற்றும் ரெய்ஸ் மாகோஸை இணைக்கும் சுற்றுலா பயணிகள் ரோப்வே திட்டத்திற்கும், தெற்கு கோவாவில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும், வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் வழங்குகிறார்.

    ×