search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police commisioner"

    • போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் துறை மானிய கோரிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்போலீசார் குறைகேட்பு கூட்டம்நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதம் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை குறைகேட்பு கூட்டம்நடத்தப்படுகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். அதன்படிமொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது. இருவாரங்களுக்குள்உரியநடவடிக்கை எடுப்பதாக,மனுதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

    • தனியாா் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு தொடா் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.
    • நகை தொழிலாளா்களை இழிவுபடுத்தும் வகையில் நகைபட்டறையில் களவாணிதனம் நிறைய நடக்கும் என்று தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளனா்.

    திருப்பூர் :

    பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுப்படுத்திய தனியாா் தொலைக்காட்சி மற்றும் தொடா் இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

    இது தொடா்பாக தமிழ்நாடு எம்.கே.டி.பேரவை திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.பிரகாஷ் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: -தனியாா் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு தொடா் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்தத் தொடரில் விஸ்வகா்மா சமுதாயத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளா்களை இழிவுபடுத்தும் வகையில் நகைப் பட்டறையில்களவாணிதனம் நிறைய நடக்கும் என்று தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளனா்.

    இது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாத்து வரும் பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.இதனால், நகைத் தொழிலாளா்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். ஆகவே, தனியாா் தொலைக்காட்சி மற்றும் தொடரின் இயக்குநா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமாபுரத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #calltaxidriversuicide
    சென்னை: 

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற கால் டாக்சி டிரைவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர், போலீசார் தன்னை அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

    இதற்கிடையே, இந்த வீடியோ தொடர்பாகவும், அவதூறாக பேசிய நபர் குறித்தும் விசாரிக்க இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் ஓட்டுநர் ராஜேஷ் குற்றம் சாட்டிய போக்குவரத்து காவலர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தரவேண்டும். 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #calltaxidriversuicide
    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

    சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் வசிப்பவர் டாக்டர் அமுதா (வயது 50). கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தனது கிளினிக்கில் டாக்டர் அமுதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சிகிச்சை பெறுவதுபோல் வந்த ஒருவர் திடீரென்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.

    டாக்டர் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா கூச்சல் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றார். அப்போது அங்கு வந்த சூர்யா என்ற இளைஞர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.

    பின்னர் அந்த கொள்ளையன் அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த கொள்ளையன் திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, 10 பவுன் சங்கிலியையும் மீட்டனர்.

    கொள்ளையனை பிடித்த சூர்யாவை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். சூர்யா தனக்கு வேலை இல்லை என்றும், ஆனால் ஏ.சி.மெக்கானிக் தொழில் தெரியும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கூறினார்.

    உரிய வேலை வாங்கித்தருவதாக சூர்யாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி நேற்று நிறைவேற்றப்பட்டது.

    கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில் சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தில் சூர்யாவுக்கு ஏ.சி.மெக்கானிக் வேலை கிடைத்தது. இதற்கான பணி நியமன ஆணையை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சூர்யாவிடம் நேற்று வழங்கினார்.

    மேலும், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் சேர்மன் ரவிபச்சமுத்து ரூ.1 லட்சம் வழங்கினார். சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வங்கி காசோலைகளும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் சூர்யாவிடம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், சாரங்கன், இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
    அவதூறு வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை காவல் ஆணையருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Shekher #PoliceCommisioner #Notice
    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். ஆனாலும், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வக்கீல் டி.அருண், சென்னை காவல் ஆணையருக்கும், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை நேற்று அனுப்பியுள்ளார்.

    அதில்,  ஐகோர்ட்டு உத்தரவிட்டும் எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 12-ம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேகரை கைது செய்யாதது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே எஸ்.வி.சேகரை கைது செய்து சட்டத்தின் முன் 7 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளது. #Shekher #PoliceCommisioner #Notice
    ×