search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police man suicide"

    விழுப்புரத்தில் குடும்ப தகராறில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    விழுப்புரம்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் தலைமை ஏட்டாக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி பத்மா. இவரும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வேல்முருகனுக்கும், பத்மாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் வேல்முருகன் மனவேதனை அடைந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த வேல்முருகன் திடீரென்று வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணிக்கு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் விவேக்(வயது 25). இவர் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் விவேக் தங்கி இருந்தார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு விவேக் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட விவேக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் விவேக் கடைக்கு சென்று புதிய புடவை ஒன்று வாங்கி அதில்அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விவேக் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்று வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சுகுமாறன் (வயது29).

    சிறப்பு காவல்படை போலீஸ்காரரான இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    குடும்ப பிரச்சனை காரணமாக சுகுமாறன் கடந்த சில வாரங்களாகவே விரக்தியுடன் காணப்பட் டார். யாருடனும் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த சுகுமாறன் திடீரென்று வீட்டு மாடியில் இருந்து குதித்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாறன் இறந்தார்.

    இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    கடன் தொல்லையால் ஆயுதப்படை போலீஸ்காரர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 29). திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காராக வேலைபார்த்து வந்தார்.

    இவரது மனைவி ரமா (25). இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி மோகன் பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே வந்த ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திபோது, கடன் தொல்லையால் போலீஸ்காரர் மோகன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×