search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police manhunt"

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் வாகனதனிக்கையில் இருந்தனர்,
    • பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு சென்றனர்

    விழுப்புரம்::

    திண்டிவனம் அருகே ரோசனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர ராஜேந்திரன், காவலர்கள் வெற்றி வேல் மற்றும் அறிவுமதி ஆகியோரின் தலைமையில் போலீசார் தீவனூர் பீம் சிட்டி பழைய காலனி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் நிறுத்தாமல் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு சென்றனர் . உடனே போலீசார் பின் தொடர்ந்து துரத்தினர். அப்போது 2 பேரில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் தேவா என தெரியவந்தது. இவர் ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர். தப்பி ஓடியவர் நாகராஜ் என தெரியவந்தது. உடனே தேவாவை கைதுசெய்தனர். இவரிடம் இருந்து 60லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • ரிக் வண்டி தொழிலாளி. இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.
    • நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். ரிக் வண்டி தொழிலாளி. இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நவீனா (வயது 26), குழந்தைகளுடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி இரவு வீட்டில் நவீனா குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 2 பேர், நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினர். அதே நாளில் அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சரவணா நகரை சேர்ந்த முட்டை வியாபாரி அருண்குமார் என்பவருடைய மனைவி லட்சுமியிடம் வீட்டின் கதவை உடைத்து 2.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சாய் பிருந்தாவன் நகரில் 2 வீடுகளுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கையில் இரும்பு ராடுடன் நுழைந்தனர். ஆனால் அந்த வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. வீட்டுக்குள் இரும்பு ராடுடன் முகமூடி‌ அணிந்தபடி அவர்கள் சுற்றி வரும் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    6 தனிப்படை

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தொடர்ந்து தேடி வருகி றார்கள். விரைவில் கொள்ளையர்கள் சிக்கு வார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    நாமக்கல் நகரில் முகமூடி கொள்ளையர்களின் அட்ட

    காசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்ச

    மடைந்துள்ளனர். கொள்ளையர்களை உடனே பிடிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×