என் மலர்
நீங்கள் தேடியது "police vigilance"
- இந்திரபாபு என்பவரின் சட்டையில் மையை தடவி நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை பறித்து சென்றனர்.
- கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் பாலவாக்கத்தில் உள்ள வங்கியில் ரூ. 1.32 லட்சம் பணத்தை எடுத்து வந்தபோது மர்ம நபர்கள் 100 ரூபாய் நோட்டுகளை வீசி பணத்தை பறித்து சென்றனர்.
இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாஸ் குப்பத்தில் உள்ள வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து வந்த இந்திரபாபு என்பவரின் சட்டையில் மையை தடவி நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






