என் மலர்
நீங்கள் தேடியது "Pretending"
- மோசடிப் பேர் வழிகள், அப்பாவி பொதுமக்களை தொடர்பு கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசில் இருந்து நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
- கொரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருள் கடத்தியதாக கூறி, விசாரணைக்காக அவரை 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவர்கள்.
திருப்பூர்:
போலீசார் பேசுவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
'மோசடிப் பேர் வழிகள், அப்பாவிகளை தொடர்பு கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசில் இருந்து பேசுவதாகவும், கொரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருள் கடத்தியதாக கூறி, விசாரணைக்காக 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவார்கள்.
அதன் பிறகு விசாரணையை வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவிப்பார்கள். இதை உண்மை என நம்பும் பொதுமக்கள், அவர்கள் கூறும் கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.அதன் பின்னரே இது மோசடி என தெரிய வருகிறது. இதில் பலர் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.
ஆகவே திருப்பூர் மக்கள் போதை தடுப்பு பிரிவு போலீசார் பேசுவதாக அழைப்புகள் வரும் போது, எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.