என் மலர்
நீங்கள் தேடியது "Prime Minister's Housing Scheme"
- பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
- அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.
அதில் பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:-
மூன்று கோடி வீடுகளை புதிதாக கட்டப் போவதாகவும் பெருமை பொங்கக் கூறியிருக்கிறார் குடியரசுத் தலைவர். கடந்த கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவர் அறிவித்த பல அறிவிப்புகளை இந்த கூட்டத்திலும் அறிவித்து இருக்கிறார். அதிலே ஒன்றுதான் இந்த வீடு கட்டும் திட்டம்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு. சரிபாதியாக செலவை குறைத்து 22,100 கோடி ரூபாய் செலவிடவில்லை. இதனால் பிரதமரின் இந்த வீடு கட்டும் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை.
ஆங்காங்கே தொடங்கிய பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஒதுக்கிய நிதியும் விரயம் ஆகிறது. மக்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. இலக்கும் எட்டப்படவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்ற 70 - க்கும் மேற்பட்ட பயனாளிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் ( ஊராட்சி ) லோகநாயகி வீடு ஒதிக்கீடு பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .
இதில் கலந்து கொண்ட பயனாளிகளி டம் வீடுகட்டாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து , ஆலோசனை வழங்கி விரைவாக வீடு கட்டி முடிக்க வேண் டும் என அறிவுறுத்தினார் . நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் , நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேத முத்து , சிவராமன் , பணி மேற்பார்வையாளர் விஜயகுமார் , துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .