search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Procurement of Nathucharkarai"

    • நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சர்க்கரையை அன்றைய தினம் விற்பனைக்கு கொண்டு வந்து பயனடையலாம்.
    • சர்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சர்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்பு சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வரும் 31-ந் தேதி காலை 11.30 மணியளவில் விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சர்க்கரையை அன்றைய தினம் விற்பனைக்கு கொண்டு வந்து பயனடையலாம்.

    மேலும், சர்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சர்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×