search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "professor arrested"

    • கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாணவி மதுரையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி, மாணவி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க செக்கானூரணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (வயது42), மற்றொரு பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    புதுச்சேரி:

    போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43).வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் திரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலை வீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்து போன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26). இவருக்கும், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த காஞ்சித்தலைவன் (33) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காஞ்சித்தலைவன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் காஞ்சித்தலைவன், அவரது தாயார் முனியம்மாள், சகோதரி தமிழ்செல்வி ஆகியோர் கவுசல்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன் பின்னர் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    போலீசார் சமரசம் செய்த பின்னரும் காஞ்சித் தலைவன் தனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வரவில்லை.

    இந்த நிலையில் காஞ்சித்தலைவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கவுசல்யா புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி பேராசிரியரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    ×