search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prohibited sale"

    தஞ்சை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் அதனை தடுக்க போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புற்றுநோயை உருவாக்கும் குட்கா விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த சட்டங்களை மீறி சில இடங்களில் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் அடிக்கடி பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் தஞ்சை மாவட்டத்திலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய போது சீனிவாசன் (வயது 55) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தஞ்சை தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் புன்னை நல்லூரில் நடத்திய சோதனையில் பாலாஜி (35) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஒரத்தநாடு சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் சீனிவாசராகவன் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது புகாரி (48) என்பவரின் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 15 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    பந்தநல்லூர் சப்-இன்ஸ் பெக்டர் நடராசன் பந்தநல்லூர் பகுதியில் கடைகளில் நடத்திய சோதனையின் போது சீனிவாசன் (31) என்பவரின் கடையில் இருந்து 5 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.

    இது தொடர்பாக வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×