search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prohibition extension"

    • கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது.
    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்..

    கடலூர்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது    இதனை அடுத்து நேற்று மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி இரவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

    இந்த மழை கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், முதுநகர், செம்மண்டலம், பாலூர் நடுவீரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூர் துறைமுக பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டித்து மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடலோரப் பகுதி பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தெரிவிக்க ப்பட்டுள்ளது.   மேலும் கடல் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் துறைமுகப்பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை 31-ம் தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீறி சென்றால் அவர்களுக்கு வழங்க ப்படும் மானியமும் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர். தற்போது கடலூர் துறைமுக பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    ×