search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property case"

    • வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணை.
    • சொத்து வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் வந்தது.

    அப்போது, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.

    • அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.
    • ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார்.

    சென்னை :

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பு பிறப்பித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ஆர்.ஜெயராமுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். 2-வது மனைவி வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமார், ஜெயலலிதா என்று இருவர் பிறந்தனர்.

    இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய சகோதர, சகோதரி ஆவர். 1950-ம் ஆண்டில், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு கோட்டில் என் அம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

    ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டதால், அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.

    எனவே, ஜெயலலிதாவின் மொத்த சொத்துகளில் 50 சதவீத பங்கை எனக்கு தர தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு மாற்றியது. இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார். ஆனால், எதிர்மனுதாரர்கள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    சந்திரபாபுநாயுடு மீது என்.டி.ராமராவ் மனைவி தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் மே 13ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #ChandrababuNaidu #ndramarao #propertycase

    நகரி:

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் 2005-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை நடந்தபோது சந்திரபாபு நாயுடு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு என்.டி.ராமராவ் மனைவி லட்சுமி பார்வதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


    இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து லட்சுமி பார்வதி இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #ChandrababuNaidu #ndramarao #propertycase

    சொத்து குவிப்பு வழக்கில் புதுவை எம்.எல்.ஏ. அசோக் ஆனந்துக்கு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ashokanandmla

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்.

    இவரது தந்தை ஆனந்தன். இவர் புதுவை பொதுப் பணித்துறையில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தலைமை என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் அசோக் ஆனந்த் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு முதல் புதுவை சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நடந்தது. இதற்கிடையே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனின் மனைவி விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு மரண மடைந்தார்.

    வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாலை புதுவை தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராமும் விதித்தார்.

    மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சம் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்

    இதனையடுத்து அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யும் வரை தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பிலும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிகிறது. #ashokanandmla

    பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. #ponmudimla #dmk
    விழுப்புரம்:

    தமிழகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நீதிமன்றத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான வழக்குகளின் விசாரணை நடைபெறும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதன் அடிப்படையில் விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

    இனி இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும். இதுபோல் பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது. #ponmudimla #dmk 
    ×