என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "protest group"
- கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை கடக்க ஒவ்வொரு முறையும் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி நிர்வாகத்து க்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.
கப்பலூர் சுங்கச்சாவடியை கைப்பற்றிய புதிய ஒப்பந்த நிறுவனம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் மாதந்தோறும் ரூ.310 கட்ட வேண்டும். சுங்கச்சாவடியை கடக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சுங்கச்சாவடி பாக்கித் தொகை லட்சக்கணக்கில் இருப்பதாகவும், அதனை உடனே செலுத்தக்கோரி வாகன உரிமையாளருக்கு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கப்பலூர் சுங்கச்சா வடி ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் நேற்று திருமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அமைச்சரின் அறிவிப்பை முன்னிட்டு போராட்ட குழுவின் அவசர கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரின் கருத்தில் முழு திருப்தி இல்லை. இந்த அறிவிப்பு தற்காலிகமானது தான். கப்பலூர் சுங்கச்சா வடிக்கு நிரந்தர தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட போவதாக போராட்டக்குழு தெரிவித்தனர்.