search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Provisional Marks Certificate"

    • தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக சான்றிதழ் வினியோகிக்கப்படும்.
    • 11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா நிருபர்களிடம் கூறியதா வது:-

    தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து வழங்குவதற்கு சிறிதுகால அவகாசம் தேவைப்படும். அதுவரையில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழக்கம் போல வினியோகிக்கப்படும்.

    11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக சான்றிதழ் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இணை இயக்குனர்கள் நரேஷ் செல்வக்குமார் உடனிருந்தனர்.

    தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையுடன் பெற்று கொள்ள வேண்டும். அரசு, மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அனைவரும் திங்கட்கிழமை முதல் தற்காலிக சான்றிதழை பெறலாம்.

    • 2022-2023 நடப்புக் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு 6.4.2023 முதல் 20.4.2023 வரை நடைபெற்றது.
    • இதற்காக மாவட்டத்தில் 189 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் 2022-2023 நடப்புக் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு 6.4.2023 முதல் 20.4.2023 வரை நடைபெற்றது.

    537 பள்ளிகள்

    சேலம் மாவட்டத்தில் 288 அரசு பள்ளிகள், 25 அரசு உதவி பெறும் பள்ளிகள், 224 தனியார் பள்ளிகள் என மொத்தம் 537 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.

    இதற்காக மாவட்டத்தில் 189 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 10 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இத்தேர்வு மையங்களில் 21,835 மாணவர்கள், 21,593 மாணவிகள் என மொத்தம் 43,428 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    39,578 பேர் தேர்ச்சி

    கடந்த 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் 19,168 மாணவர்கள், 20,410 மாணவிகள் என மொத்தம் 39,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் போன்ற மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டனர். செல்போன், கனினி வழியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

    தற்காலிக மதிப்பெண் பட்டியல்

    வழக்கம்போல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி களுக்கு கொண்டு சேர்க்க தாமதம் ஆகும் என்பதால், மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு ஏதுவாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் பயின்ற பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வருகிற 26-ந்ேததி மதியத்தில் இருந்து விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 300 பள்ளிகளை சேர்ந்த 18,143 மாணவ- மாணவிகளுக்கும் வருகிற 26-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. எனவே மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, இந்த தற்காலிக மதிப்பெண் சான் றிதழை பெற்று கொள்ளலாம். தலைமை ஆசிரியர் கையொப்பம், பள்ளி சீல் வைத்து இந்த மதிப்பெண் சான்றிதழ் பெற வேண்டும் என கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×