search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PSLV rocket"

    • பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.
    • இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு டெலியோஸ்-2 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன் சிங்கப்பூரின் மற்றொரு  செயற்கைக்கோளான 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்து, சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. டெலியோஸ்-2 செயற்கை கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

    இதற்கு முன்பு, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
    • இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

    ஸ்ரீஹரிகோட்டா:-

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

    இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

    இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.

    • பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
    • ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

    அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது.
    • கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அத்துடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    அவ்வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு செயற்கைக் கோள்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

    இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம்பிடிக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 2.8 கிலோ எடை கொண்டது. 

    ×