search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Examination Paper"

    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்க ளுக்கான ஆண்டு பொதுத் தேர்வு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தொடங்க இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

    பொதுத் தேர்வுவை நடத்துவதற்கு ஆசிரியர்க ளை துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பா ளர் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலரால் தேர்வுப் பணி ஒதுக்கப்படுகிறது.

    ஆசிரியர்களை துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் நிற்கும் படை போன்ற தேர்வுப்ப ணிக்கு ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். இளையோரை துறை அலுவலராகவும், பணியில் மூத்தோரை கீழ்நிலைப் பணியில் நியமிக்கும் போது மூத்த ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள். இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அறை கண்காணிப்பாளர் பணியைத் தவிர மற்ற தேர்வுப் பணிகளில் பணிநியமன முன்னுரிமை படி நியமனம் செய்ய வேண்டும். அதே போல் ஆசிரியர்கள் பணிபுரியும் வட்டாரத்திலேயே தேர்வுப் பணி வழங்க வேண்டும்.

    பெண் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதியுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வுப் பணி வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் சொந்த வசிப்பிடத்தில் தங்கி நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேர்வுப்பணி ஒதுக்கும் போது வசிப்பிடத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

    மேலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாள் மருத்துவம் செய்து வருபவர் போன்ற ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×