search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Screaming"

    • கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்து வந்தது.
    • வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்து வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடலூர் சுற்றுலா மாளிகை முகப்பு பகுதியில் உள்ள மரத்தில் இருந்து திடீரென்று பெரிய அளவிலான மரக்கிளைகள் சாலையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்போது அருகாமையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதோடு, வாகன ஓட்டிகள் முன்கூ ட்டியே வாகனங்களை நிறுத்தினர்.

    மேலும் அப்போது அவ்வழியாக வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்ப ட்டதோடு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் சாலையில் விழுந்த பெரிய அளவி லான மரக்கி ளைகளை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று வைத்தனர். இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவ ட்டார பகுதிகளில் சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் உள்ள கிளைகளை சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு அகற்றி பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×