search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "purandeshwari"

    • சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார்.
    • புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    திருப்பதி:

    தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.

    சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.

    என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது.

    புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.

    நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.

    • ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அவர் ராஜ மகேந்திரவரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். மதியம் 3.30 மணிக்கு ராஜ மகேந்திரவரம் தொகுதியில் உள்ள வேமகிரி என்ற இடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

    இதில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அந்த தொகுதியின் வேட்பாளர் புரந்தேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனக்கா பள்ளியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.எம். ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆந்திராவில் வருகிற 13-ந் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக தொடர்ந்து 4 பொதுக் கூட்டங்களில் மோடி பேச உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    • ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
    • தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள சட்டமன்ற தொகுதியான விஜயவாடா (மத்தி), மச்சிலிப்பட்டினம், குண்டூர் (மேற்கு), நெல்லூர், கதிரி, அரக்கு, மதனப்பள்ளி, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஷ்வரி, மாநில அமைப்பு செயலாளர் மதுகர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

    பா.ஜ.க. மாநில தலைமை கேட்ட தொகுதிகளை ஒதுக்க சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்த வேண்டுமென பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனால் ஆந்திராவில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காமல் சோர்வடைந்து உள்ளனர்.

    • தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது.

    ஆந்திரா மாநில முன்னாள் முதல்-அமைச்சர் நடிகர் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜ.க.வின் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று முதன் முதலாக விஜயவாடா வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் பா.ஜ.க.வினர் பூக்களை தூவி வரவேற்றனர்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிட உயர்நிலைக் குழு கவனித்துக் கொள்ளும். ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்துவேன்.தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. எதிர்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி தொடரும்.


    புரந்தேஸ்வரி மீது மலர்களை தூவிய மக்கள்

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது. மத்திய அரசு வீட்டு வசதி திட்டங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 65 சதவீதம் வீடுகள் தற்போது கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 35 சதவீத குடியிருப்புகள் கூட தயாராக இல்லை.

    ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் காரணமாக மாநிலத்தில் சாலைகள் மோசமாக உள்ளன. தேசிய திட்டமான போலவரம் பாசன திட்டத்தின் பணிகள் மெதுவாக நடக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி அரசு திட்டமிட்டபடி அதனை முடிக்க முடியாவிட்டால் அதன் கட்டுமானத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியின் சகோதரியான புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி குறித்து எதுவும் பேசாதது அந்த கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×